நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்

கோலாலம்பூர்:

பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வழங்கினார்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியின்கீழ் இருக்கும் 5 பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

டியூசன் ரக்யாத் திட்டத்தின்கீழ் இந்நிதி அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

11 பள்ளிகளுக்கு 55 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதியை பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதே வேளையில் இப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் ஆதரவுடன் கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி நிதிகள் வழங்கப்பட்டது.

இந்த கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்வு இன்று கோத்தா டாமான்சாராவில் நடைபெற்றது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் இந்நிகழ்வுக்கு தலைமையேற்று இந்த நிதியை எடுத்து வழங்கினார்.

பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரிய உறுப்பினரும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான யோங் சஃபூரா ஒத்மான், அறவாரியத்தின் தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால் அப்துல் கனி, துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பி40 மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த உதவிகளை பேங்க் ரக்யாட் அறவாரியம் செய்து வருகிறது.

வரும் காலங்களில் இன்னும் பரவலாக இந்த உதவிகளை அறவாரியம் செய்யும் என்று யோங் சஃபூரா ஒத்மான் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset