நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானுக்கு எதிரான ஓப் குளோபல் கீழ் 155 பேர் கைது: 186 பேர் மீட்கப்பட்டனர்: போலிஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின்

கோலாலம்பூர்:

குளோபல் இக்வானுக்கு எதிரான ஓப் குளோபல் நடவடிக்கையின் கீழ் 155 பேர் கைது செய்யப்பட்ட வேளையில் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தேசிய போலிஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

ஓப் குளோபல் கீழ் இன்று காலை முதல் நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் குளோபல் இக்பால் ஹோல்டிங்ஸ் பின்தொடர்பாளர்களான 155 பேரை போலிசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் 78 ஆண்கள், 77 பெண்கள் ஆவர். அதே வேளையில் 102 ஆண்கள், 85 பெண்கள் என மொத்தம் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரம்பால் அடிக்கப்பட்ட சிறுவனும் அடங்குவார். அச்சிறுவன் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

82 தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கிளினிக்குகள், மஹாத், தனியார் வீடுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் வாயிலாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset