நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

பெட்டாலிங்ஜெயா:

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ் மடானி அரசாங்கம் மற்றொரு சிறப்பு திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளது.

அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் எழும் பல விஷயங்களை ஆராய அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் நாட்டில் உள்ள இந்திய தொழில்முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்த மூன்று சிறப்பு திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்திய தொழில்முனைவோரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் மற்றொரு சிறப்பு திட்டத்தை நான் அடையாளம் கண்டுள்ளேன்.

நான் முன்பு அடிக்கடி வலியுறுத்தியபடி, இந்திய சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கமும் கவனமும் ஆகும்.

பெட்டாலிங்ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்ற ஓணம் வண்ணல்லோ 3.0 நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பின் டத்தோஸ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

மலேசிய மலையாளி சங்கத்தினர் பேங்க் ரக்யாட் அறவாரியத்துடன் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

பேங்க் ராக்யாட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி  சைபுல் ரிசல் அப்துல் கனி, ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர்  உட்பட 800க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset