நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார் 

பெய்ஜிங்: 

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று பயணத்தை நிறைவு செய்து விட்டு தாயகத்திற்குப் புறப்பட்டார். 

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை ஏற்றி வந்த சிறப்பு விமானம் காலை 9.28 மணிக்கு பெய்ஜிங் கேப்பிடல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. 

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், சீனாவுக்கான மலேசிய தூதர் டத்தோ நோர்மான் முஹம்மத், வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர். 

புறப்படுவதற்கு முன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு சீனா நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

17ஆவது மாமன்னராக பதவியேற்ற சுல்தான் இப்ராஹிம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவிற்குப் பயணமாகி இருந்தார். சீன நாட்டு அதிபரான XI JINPING உடனும் அவர் சந்திப்பு நடத்தினார் குறிப்பிடத்தக்கது

-தமிழன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset