நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நேரில் சந்தித்தார்: 13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாக அறிவித்தார்

ஜித்ரா:

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.

கெடாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி 8,022 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 40 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கெடா வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிட்டார்.

அதே வேளையில் திதி காஜா தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு அவர் சென்றார்.

அங்கு தங்கியிருக்கும் மக்களை அவர் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் கெடா வெள்ள நிவாரணத்திற்காக மதானி அரசாங்கம் 13 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குவதாக அறிவித்தார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset