நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாப்பான் வரலாற்றுப்பூர்வ சுற்றுலாத் தலமாக உருமாற்றம் பெறும்: சிவக்குமார் நம்பிக்கை 

பத்துகாஜா:

பத்துகாஜா நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாப்பான் நகர் தற்போது சுற்றுலாத் தலமாக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அதனை மேலும் மேம்படுத்தவும் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையை உறுதி செய்யவும் அச்சிறு நகரின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில்  பெரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரப்படும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இம்முயற்சிகள் மாநில சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை செய்திடும். அதேவேளையில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகளின் கவனத்தையும் அது ஈர்க்கும் என தனது நாடாளுமன்ற சேவை மையத்தின் வாயிலாக மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்; இங்கு செயலிழந்து காணப்படும் மார்கெட் அதன் பொலிவையும் இழந்துள்ள நிலையில் இனி அந்த கட்டடத்தின் தேவை இல்லாததால் அதனை அகற்றும் நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.இந்த மார்கெட்டின் தோற்றம் சுற்றுலா பயணிகளுக்கு முகம் சுழிக்க வைக்கலாம் என்னும் காரணத்திலான் அதனை அகற்ற வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும்,இடிபடும் மார்கெட் பகுதியில் புதிய நவீன மண்டபம் எழுப்பிட திட்டம் கொண்டிருபதாகவும் ,இது சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

பாப்பான் கிராம மேம்பாட்டு நிர்வாகம் தொடர்ந்து இந்நகரை சுற்றுலா தலமாக உருமாற்றுவதிலும், அதுசார்ந்த விளம்பரங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்கான அனைத்து பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் தாம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,கிராம மேம்பாட்டு நிர்வாகத்திடம் பல்வேறு விசயங்கள் குறித்து பேசியதில், நடப்பில் இயங்கி வரும் பொது மண்டபத்தின் மேம்பாடு நடவடிக்கை, நீர், மின்சார செலவீனம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக 5000 ரிங்கிட் மானியம் வழங்கி உதவியுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

மேலும்,இந்நாட்டில் பல்வேறு இனங்களின் பாரம்பரியமும் வரலாறும் பேணி காக்கப்படும்.  ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையும் செயல்பாடும் பாப்பான் நகரிலும் மையமிட்டிருக்கும்.  இந்நகரின் வரலாறும் பாரம்பரியமும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதாகவும் அது உள்ளூர் மக்களின் அடையாளமாய் உயிர்தெழுந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது தாம் மேற்கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களாலும் செயல்பாட்டாலும் பாப்பான் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுக்கும் அதேவேளையில் இங்குள்ள  பல்லின மக்களின் ஒற்றுமையும் புரிந்துணர்வையும் மேலோங்க செய்வதோடு அவர்களின் மேம்பாட்டையும் வளர்ச்சியையும் ஆக்கப்பூர்வமான இலக்கை நோக்கி பயணிக்க வைக்கிறது என்றும்  சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset