நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ  டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் தொகுதியைச் சேர்ந்த 5,100க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

அதேவேளையில் நம் சமுதாயத்தின் வாக்கு முழுவதும் சிந்தாமல் சிதறாமல் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லாவிற்கு செலுத்தப்பட வேண்டும் என்று நட்புடனும் உரிமையோடும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

மத்தியில் அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தைப் போல, ஜொகூர் மாநிலத்திலும் நம்பிக்கைக் கூட்டணி-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசு அமைந்துள்ளது. அதில், மஇகா சார்பில் ஓர் ஆட்சிக் குழு உறுப்பினரும் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

கடந்த கால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு, எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி இந்திய சமுதாயத்திற்கு அதிக அளவில் கடமை ஆற்றியுள்ளது என்பதை எண்ணிப் பார்த்தால், மஇகாவும்  அது இடம்பெற்றுள்ள தேசிய முன்னணியும்தான் என்ற உண்மையை இந்திய சமுதாயம் நன்கு உணரும்.

மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வென்றால், அதன்வழி மஇகாவின் கரங்களும் வலுப்படும் என்ற உண்மையைச் சொல்வதில் மஇகாவிற்கு எந்தத் தயக்கமுமில்லை.

அந்த வகையில், குளுவாங் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கோத்தாவில் அம்னோ அடையப்போகும் வெற்றி, மக்கோத்தா தொகுதிவாழ் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜோகூர் மாநில இந்தியர்களுக்கும் உரிய சமூக, பொருளாதார, கல்வி நலத்திட்டங்கள் குறித்து மாநில அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்கவும் அவற்றுக்கான நிதியுதவி பெறவும் அதிக வாய்ப்பு ஏற்படும்.

எனவே, இன்னும் 5 நாள் இடைவெளியில் நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் மக்கோத்தா இந்திய வாக்காளர்கள் அனைவரும் ஒருமுகமாக தேசிய முன்னணி வேட்பாளருக்கு தங்களின் ஆதரவை வழங்கும்படி மீண்டும் கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset