நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருள் விலையேற்றம், வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு தீர்வு காணும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, பொருள் விலையேற்றப் பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தாம் பிரதமராகப் பதவியேற்ற இந்த ஈராண்டு காலத்தில் இன்னும் தீர்க்கப்படாமலிருக்கும் சில பிரச்சனைகளில் இந்த இவ்விரு விஷயங்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

நாம் பொறுப்பேற்றது முதல் அரசியல் நிலைத்தன்மையுடன் உள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. 

ரிங்கிட்டின் மதிப்பும் வலுவடைகிறது. ஆயினும், இவற்றால் நாம் கர்வம் கொண்டு விடக்கூடாது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சனைகள் இன்னும் உள்ளன. 

ஆகவே, மடானி வரவு செலவுத் திட்டத்தில் அப்பிரச்சனைக்குத் தீர்வு காணவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset