நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் புயல் தாக்கியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன: 71 இடங்களில் வெள்ளம்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் புயல் தாக்கியதில்  நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. 71 இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.புயல் தாக்கியதில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் கீழே சாய்ந்தன.

பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோவ் இதனை உறுதிப்படுத்தினார்.

இதனால் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வானிலை தகவல்களுக்காக காத்திருக்குமாறும் தலைமை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்புயல் நாளை வரை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆகவே மக்கள் எச்சரிக்கையுடம் இருக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் பினாங்கில் 133 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. 71 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால்  மூன்று வீடுகள், எட்டு கார்கள் சேதமடைந்தன.

நேற்று திங்கட்கிழமையன்று ஒன்பது இடங்களில் மரங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 43 இடங்களில் மரங்கள் விழுந்ததாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset