நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருவர் இறந்தார், ஒருவருக்கு எங்கே என்று தெரியவில்லை; 1எம்டிபி சாட்சியங்கள் வெறும் செவிவழிச் செய்தி மட்டுமே: வழக்கறிஞர் ஷாபி

கோலாலம்பூர்:

ஒருவர் இறந்தார், ஒருவருக்கு எங்கே என்று தெரியவில்லை என்பதால் 1எம்டிபி சாட்சியங்கள் வெறும் செவிவழிச் செய்தி மட்டுமே.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

1எம்டிபி நிதி மோசடி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கக் கூடாது.

குறிப்பாக நஜீப்பின் முன்னாள் தலைமைத் தனிச் செயலாளர் மறைந்த டத்தோ அஸ்லின் அலியாஸ், தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ ஆகியோரை இணைக்கும் ஆதாரங்களில் இது முக்கியமானதாகும்.

நஜீப்பின் சார்பாக அஸ்லின், ஜோ லோ செயல்பட்டதாக அரசு தரப்பு சாட்சிகள் கூறுகிறது.

ஆனால் ஜோ லோவின் இருப்பிடம் தெரியாத நிலையில் அஸ்லின் இறந்துவிட்டதால் அவர்களின் சாட்சியத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஷாபி தனது வாதத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset