நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் 

கூச்சிங்: 

MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் எந்தவொரு பரிந்துரையோ அல்லது பதில்களோ வழங்கலாம் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார். 

தயார் செய்யப்பட்ட MOU வரைவு அறிக்கை என்பது கலந்துரையாடலுக்கு அடித்தளமாகும். 

பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்காக தங்கள் தரப்பு எதிர்கட்சியினரை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. 

ஏதேனும் பரிந்துரைகள் அல்லது பதில்கள் இருந்தால் எதிர்கட்சி தரப்பு தாராளமாக தெரிவிக்கலாம். 

முன்னதாக, ஒற்றுமை அரசாங்கம் தயார் செய்த MOU வரைவு அறிக்கையை எதிர்கட்சியினர் நிராகரித்தனர். இதனால் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஒற்றுமை அரசாங்கம் இரு MOU அறிக்கைகளைத் தயார் செய்தது. 

எதிர்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக MOU உடன்படிக்கையானது எதிர்கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. அரசியலமைப்புக்கு புறம்பாக இருப்பதாக கூறி அதனை அவர்கள் நிராகரித்தனர்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset