நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்-அர்காம் முன்னாள் தலைவரின் மகன்,  குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 19 பேர் கைது 

கோலாலம்பூர்:

அல்-அர்காம் முன்னாள் தலைவரின் மகன்,  குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 19 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஓப் குளோபல் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பல கைது நடவடிக்கைகளை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளோபல் இக்வான் ஹோல்டிங்கின்  நிர்வாக அதிகாரி, அவரது மனைவி உட்பட பல மூத்த தலைவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை பல இடங்களில் நடத்திய நடவடிக்கையில்,

அதன் தலைவர் உட்பட மொத்தம் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்களில் அல் அர்காமின் முன்னாள் தலைவர் அஷாரி முகமதுவின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 12 ஆண்களூம் ஏழு பெண்களும் அடங்குவர். இவர்கள் 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

இக்கைது நடவடிக்கைகளை தேசிய போலிஸ் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே வேளையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset