நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமய கலந்தாலோசனை மன்றத்துடனான பேச்சுவார்த்தையின் மூலம் நல்லிணக்கமான மலேசியாவை உருவாக்க முடியும்: துணையமைச்சர் சரஸ்வதி

புத்ராஜெயா:

அரசாங்க இலாகா, அமைப்புகளில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் அதிகாரிகளை அமர்த்துவது குறித்து  பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மட்டும் தாவோ சமயங்களுக்கான மலேசிய கலந்தாலோசனை மன்றத்துடன் சிறப்பு சந்திப்பு நடத்தப்பட்டது. 

இந்த சந்திப்பு நேற்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவில் நடைபெற்றது. 

இந்த முக்கிய சந்திப்பில் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங், துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, பிரதமர் இலாகாவின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செனட்டர் டாக்டர் ஹாஜி முகமட் நாயிம் கலந்து கொண்டனர். 

இஸ்லாமிய விவகாரங்களில் கவனம் செலுத்த மட்டுமே இந்த அதிகாரிகள் அரசாங்க இலாகா, அமைச்சுக்களில் அமர்த்தப்படுவதாக இந்த கூட்டத்தில் விளக்கம் தரப்பட்டது. 

ஜாக்கிம் அதிகாரிகள் அமர்த்தப்படுவது தொடர்பாக இஸ்லாமிய, இஸ்லாமிய அல்லாத தலைவர்கள்  பிரதிநிதிகளிடையே ஒரு இணக்கம் காணப்பட்டன. 

இந்த விவகாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் குறித்து சுமூகமான தீர்வு காணப்படும் என இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. 

சமய விவகார பராமரிப்பு பிரிவின் வழி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண புரிந்துணர்வு காணப்பட்டது. 

இதனிடையே இதுபோன்று முயற்சிகள் தொடர்ந்தால் கூடுதல் நல்லிணக்கமான மலேசியாவை உருவாக்க முடியும் என தாம் நம்புவதாக  துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கூறினார்.

இந்நாட்டில் சமயங்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு வலுபெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு சமயத்தின் சிறப்பு அம்சங்கள், போதனைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஒரு வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset