நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

GLOBAL IKHWAN நிறுவனத்தின் 96 வங்கி கணக்குகள் முடக்கம்: டான்ஶ்ரீ ரஸாருடின் தகவல் 

கோலாலம்பூர்: 

GLOBAL IKHWAN நிறுவனத்தின் 96 வங்கி கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று அரச மலேசிய காவல்துறை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார். 

2001ஆம் ஆண்டு AMLATFPUAA சட்டத்தின் செக்‌ஷன் 44(1) யின் கீழ் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 

96 வங்கி கணக்குகளை உட்படுத்தி மொத்தமாக 581,552 ரிங்கிட் நிதி முடக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நிறுவனத்திற்குச் சொந்தமான எட்டு ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக GISBH நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி நசிருடின் முஹம்மத் அலி அழைக்கப்படுவார் என்று அவர் சொன்னார். 

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவத்ஆக அவர் குறிப்பிட்டார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset