நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MRS MALAYSIA WORLD 2024 பட்டத்தை தட்டிச் சென்றார் டாக்டர் ஷாலினி ராமசந்திரன் 

கோலாலம்பூர்: 

2024ஆம் ஆண்டுக்கான MRS MALAYSIA WORLD பட்டத்தை DR. Y & DR.S FITNESS நிலையத்தின் தோற்றுநரும் பொறுப்பாளருமான டாக்டர் ஷாலினி ராமசந்திரன் தட்டிச் சென்றார். 

37 வயதான டாக்டர் ஷாலினி ராமசந்திரன்  DR. Y & DR.S FITNESS நிலையத்தை நடத்தி வருகிறார். மலேசியா, சிங்கப்பூர் என்று 43 ஸ்டூடியோ நிலையங்களில் இந்த உடல் உறுதி நடவடிக்கையை பொதுமக்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். 

May be an image of 13 people and wedding

சமூக ஊடக பிரபலமாகவும் வலம் வரும் டாக்டர் ஷாலினி ராமசந்திரன், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற MRS MALAYSIA WORLD போட்டியில் இரண்டாம் நிலையை அடைந்தார். 

ஆனால் இவ்வாண்டு நடைபெற்ற MRS MALAYSIA WORLD போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளர் பட்டத்தைத் தட்டி சென்றுள்ளார். 

அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை பயணம் அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு தந்தையின் மரணம், 2020ஆம் ஆண்டு ஶ்ரீ மூடா வெள்ளத்தில் கிளினிக் சேதம் என சோதனைகள் பலவும் அடுக்கிக்கொண்டே போனாலும் ஒரு பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி அசத்தியுள்ளார் டாக்டர் ஷாலினி ராமசந்திரன் 

நோய்களைத் தீர்க்க உடல் உறுதி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியம். அதனை வலியுறுத்தும் விதமாக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் உடல் உறுதி வகுப்புகளை நடத்தி வருகிறார். 

MRS MALAYSIA WORLD பட்டத்தை வென்ற டாக்டர் ஷாலினி ரவிசந்திரன், MRS MALAYSIA WORLD ORGANIZATION அமைப்புக்கும் அதன் பொறுப்பாளர்களான டத்தோ& டத்தின் ஹர்வீன்கவுர் இருவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்து கொண்டார். 

MRS MALAYSIA WORLD 2024 போட்டியில் பங்குக்கொண்டு பட்டத்தை  வென்ற டாக்டர் ஷாலினி ராமசந்திரனுக்கு நம்பிக்கை ஊடகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset