நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் சின்னம் கொண்ட இரு வாகனங்களுடன் ஐவர்: தாய்லாந்து செல்லும் வழியில் கைது

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் சின்னம் கொண்ட இரு வாகனங்களுடன் ஐவர் தாய்லாந்து செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர்.

இதில் குளோபல் இக்வான் முக்கிய தலைவரின் மகனும் அடங்குவார் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸுடன் தொடர்புடைய 5 பேர் தாய்லாந்தை நோக்கி செல்லும் புக்கிட் காயூ ஹீத்தாமில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அந்நிறுவனத்தின் சின்னம் கொண்ட இரண்டு பொழுதுபோக்கு வாகனங்களை (மோட்டார்ஹோம்கள்) பறிமுதல் செய்யப்பட்டது.

வட மண்டல எல்லைப் புலனாய்வுப் பிரிவின் சோதனையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த வாகனம் தாய்லாந்திற்குச் செல்லும் புக்கிட் காயூ ஹீத்தாம் குடிநுழைவு,  சுங்கத்துறையின் தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகத்திற்கு நோக்கி சென்றதாக  கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கெடா குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.  

இதில் 28 முதல் 41 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களை கைது செய்ததுடன்  ஓர் வேன், மைவி காரொன்றையும் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset