நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியத் திரைப்படத்துறைக்குப் புதிய அடையாளம்: THE FORGE MALAYSIA பயிற்சி முகாம்

கோலாலம்பூர்:
 
மலேசியத் திரைப்படத் துறையை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக THE FORGE MALAYSIA எனும் சிறப்பு பயிற்சி முகாம் மலேசியர்களுக்காக ஆரம்பிக்கப்பட உள்ளது. 

இம்முகாம், மலேசியத் திரைப்படத் துறையில் நிபுணத்துவம் பெற விரும்பும்வர்களுக்கு, கலை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான திறமைகளை வழங்கும் தளமாக இருக்கும்.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைநகர் GSC LALA PORT-இல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இம்முகாமின் அறிமுகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், விஜய் நடித்த கோட் திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, THE FORGE MALAYSIA பயிற்சி முகாமை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

THE FORGE MALAYSIA-வைச் சேர்ந்து நடத்தும் Kick Off நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பிரேம் ஆனந்த், முகாமின் முக்கிய நோக்கங்களை விளக்கி, இந்த முயற்சி மலேசியத் திரைப்படத் துறையை நவீன பங்களிப்புகளுடன் வளர்க்கும் விதமாக அமையும் என்றார். 

இது, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெறும் வகையில் திரைப்படத் துறையின் மையமாகும் என்றும் அவர் கூறினார்.

இதில் உரையாற்றிய இயக்குநர் வெங்கட் பிரபு, "திரைப்படம் என்பது வெறும் கதை கூறுவதற்கு அல்ல; அது புதிய எண்ணங்களையும் படைப்பாற்றலையும் கொண்டு வர வேண்டும். இத்தகைய முழுமையான அனுபவம் தான் ஒரு திரைப்படத்தை சரியாக உருவாக்க உதவும்," என்றார். 

மேலும், இந்தப் பயிற்சி முகாம், எதிர்காலத் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியர்களுக்கு இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலகத் தரத்திலான திரைப்படங்களைக் கட்டியமைக்கக் கூடிய திறமையைப் பெறுவது முக்கியம் என்று பிரேம் ஆனந்த் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset