நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் முடங்கியது: வர்த்தக, விளையாட்டு எக்ஸ் பக்கங்களில் சேவை தடங்கல் 

வாஷிங்டன்: 

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள எக்ஸ் தள பயனர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். 

கார்ப்பரட் நிறுவனங்கள், விளையாட்டு, அரசாங்க நிறுவனங்கள், ஊடக தளங்கள், சினிமா பிரமுகர்கள், சமூக ஊடக பிரபலங்கள் என அனைவரின் எக்ஸ் பக்கங்களும் ஒரே நாளில் முடக்கப்பட்டது 

மலேசியாவில் மலேசிய தேர்தல் ஆணையம், மலேசிய கெசட் செய்தி ஊடகம், ஊழியர் சேமநிதி வாரியம் ஆகிய எக்ஸ் பக்கங்களும் முடக்கப்பட்டது. 

இருப்பினும், மாற்று கடவுசொல்லைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட எக்ஸ் பக்கங்கள் யாவும் சீரமைக்கப்பட்டது. 

SHACKED SOLANA என்று குறிப்பிட்டு தங்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. எக்ஸ் தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை எக்ஸ் தரப்பிடமிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset