நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வசதி குறைந்த மாணவர்களின் பதிவு கட்டணத்தைப் பல்கலைக்கழகங்கள் ஒத்திவைக்க வேண்டும்: ஜம்ரி அப்துல் காடீர் 

பெட்டாலிங் ஜெயா: 

அனைத்துப் பல்கலைக்கழக நிர்வாகங்களும் ஏழை மாணவர்களின் பதிவுக் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று உயர்க்கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துல் காடீர் கேட்டுக் கொண்டார். 

சமந்தப்பட்ட மாணவர்களுக்கு தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (PTPTN) மூலம் ஆரம்ப படிப்பு உதவியை ஏற்பாடு செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

முதலில் மாணவர்களின் பதிவை உறுதி செய்ய  வேண்டும். பின் அவர்களுக்கான ஆரம்பக் கட்ட உதவி (PTPTN) மூலம் செய்து தரப்படும் என்று அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்கள் உயர்க்கல்வியைத் தொடர  நிதிப் பிரச்சனைகள் தடையாக இருக்க கூடாது. 

சிறப்பான தேர்ச்சி பெற்று நிதி சுமையால் பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலை இருக்க கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset