நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஃப்.ஏ.எம் திட்டமிடல் வரைவையும் முதன்மை அடைவுநிலை வழிகாட்டியையும் தயார்ப்படுத்த வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

ஹரிமாவ் மலாயா அணி சரியான பாதையில் செல்ல வேண்டுமென்றால் மலேசிய காற்பந்து சங்கமான FAM அதன் திட்டமிடல் வரைவையும் முதன்மை அடைவுநிலை வழிகாட்டியான KPI யையும் தயார்ப்படுத்த வேண்டும். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வலியுறுத்தலை  மேற்கொண்டார். 

காலை வேளையில் மலேசிய காற்பந்து சங்கத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த கோரிக்கையை முன்வைத்தார் என்றும் தேசிய அணியின் தரத்தை மேம்படுத்த 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். 

மேலும், 23 வயதுக்குக்கீழ்ப்பட்ட தேசிய அணியின் அடைவுநிலையை இளைஞர், விளையாட்டு துறை அமைச்சு கண்காணிக்கும் என்று அவர் தமது முகநூல் வாயிலாக பதிவிட்டார். 

ஹரிமாவ் மலாயா அணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது போலவே மற்ற விளையாட்டுக்கும் அரசாங்கம் போதிய மானியங்கள் வழங்கும் என்று அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset