நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் கட்சியின் சைஃபுடின் நசுத்தியோன் ஓரங்கட்டப்படவில்லை: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

பிகேஆர் கட்சியிலிருந்து அதன் தலைமை செயலாளர் பதவியை சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் துறந்தார். இதனால் அவர் அக்கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதை அரசியல் ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். 

குவாந்தான் எம்.பியான ஃபுஸியா சாலேவை கட்சியின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது புதிய தலைவர்களையும் அவர்களின் தலைமையையும் பிகேஆர் கட்சி விளங்குவதாக SINGAPORE INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஒ எய் சன் கூறினார். 

டத்தோஶ்ரீ அன்வாரின் தீவிர ஆலோசகராக வலம் வரும் சைஃபுடின், அன்வாரின் கட்டளைகளுக்குச் செவி சாய்ப்பவர். இதனால் உள்துறை அமைச்சரான அவர் ஓரங்கட்டப்படவில்லை. அவருக்கும் அன்வாருக்கும் இடையில் எந்தவொரு மோதலும் இல்லை. 

கடந்த சனிக்கிழமை பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சைஃபுடின் நசுத்தியோன் விலகினார். அவருக்குப் பதிலாக ஃபுஸியா சாலே அப்பதவிக்குப் பொறுப்பேற்றார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset