நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசு முடிவு: ஜாஹித்

புத்ராஜெயா:

ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் தானாக முன்வந்து மேற்கொள்ளப்படும் கொள்கையை பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கான அமைச்சு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விஷயத்தை முன்வைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பரிசீலனைக்குப் பிறகு, தற்போதுள்ள கொள்கையைப் பராமரிக்க அமைச்சர்கள் குழு ஒப்புக் கொண்டது.

அதாவது ஜாக்கிம்,  இஸ்லாமிய மத வாரியம், மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையால் மேற்கொள்ளப்படும் மலேசிய ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பம் தன்னார்வமானதாக இருக்க வேண்டும்.

இதில் எந்த தரப்பையும் கட்டாயப்படுத்த முடியாது என்று ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset