நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் என்பது பன்றி இறைச்சி, மது பானப் பயன்பாடு இல்லை என்பதை மட்டுமே குறிக்கவில்லை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

ஹலால் என்பது பன்றி இறைச்சி, மது பானப் பயன்பாடு இல்லை என்பதை மட்டுமே குறிக்கும் என்று அர்த்தம் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஹலாலின் வரையறை கடந்த சில தசாப்தங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து, அனுமதிக்க முடியாத உணவைத் தவிர்ப்பதற்கு அப்பால் விரிவடைந்து வருகின்றது என்றார் அவர்.

கடந்த காலத்தில், ஹலால் என்பது பன்றி இறைச்சி, மது பானப் பயன்பாடு இல்லை என்பதை மட்டுமே குறிக்கும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. 

தற்போது ஹலால் என்பது உணவு பாதுகாப்பு, தூய்மை மற்றும் தீங்கிழைக்கும் பொருட்களைத் தவிர்ப்பதற்கான அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவதையும் குறிக்கின்றது என்று என்றார் பிரதமர்.

ஹலால் தயாரிப்புகள் சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை விட கடுமையான தரங்களைச் சான்றிதழில் கோருவதால் உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்று அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset