நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சீனாவிற்கு பயணமாகவுள்ளார்

கோலாலம்பூர்:

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இம்மாதம் 19-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

இந்த வரலாற்றுப்பூவப் பயணம் ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் சீன-மலேசிய அரச தந்திர உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பேரரசரின் இப்பயணம் மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தையும் அணுக்கமான நட்புறவையும் ஏற்படுத்தும் என்று இஸ்தானா நெகாரா ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது. 

கடந்த ஐம்பது ஆண்டுகளில் சீனாவுடனான உறவின் வாயிலாக மலேசியாவுக்குப் பல்வேறு அனுகூலங்கள்  கிடைத்துள்ளன என பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலக்கவியல்  பொருளாதாரம், தொழில்துறை, பசுமை மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் அந்நாடு கொண்டிருக்கும் நிபுணத்துவத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள இயலும் எனத் தாம் நம்புவதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்தப் பயணத்தின் போது சீனப் பிரதமர் லீ கியோங், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பேரரசர் சந்திப்பு நடத்துவார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங் பொது விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு (கோமேக்) வருகை புரியும் மாமன்னர் சீனாவின் விமானத் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகளைக் கண்டறிவார்.

சீனாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த மலேசியர்களையும் மாமன்னர் இந்த பயணத்தின் போது சந்திக்கவுள்ளார். பெய்ஜிங் அந்நிய ஆய்வு பல்கலைக்கழகத்தில் உள்ள மலாய் ஆய்வியல் துறையைத் தமது பெயரில் உருமாற்றம் செய்யும் நிகழ்ச்சிக்கும் அவர் தலைமையேற்பார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset