நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

61ஆவது மலேசிய தின கொண்டாட்டம்: 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிப்பு

கோத்தா கினாபாலு: 

2024ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டம் கோத்தா கினாபாலுவில் உள்ள பாடாங் மெர்டேக்காவில் மிக விமரிசையாக நேற்றிரவு நடந்து முடிந்தது. 

இந்த கொண்டாட்ட நிகழ்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பிரமுகர்கள், அதிகார்கள், பங்கேற்பாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 

நாட்டின் 61ஆவது மலேசிய தினத்தைக் கொண்டாட்ட மாலை முதலே மக்கள் அதிகமானோர் அப்பகுதியில் குழும தொடங்கினர். 

மலேசிய தின கொன்டாட்டத்திற்கு சபா மாநில ஆளுநர் ஜுஹார் மஹிருடின், அவரின் மனைவி நோர்லிடா ஆர்.எம், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஜிசா, அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மலேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு ஆவணப்படம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

சபா, சரவாக் மாநிலங்கள் மலேசிய கூட்டமைப்பில் இணைந்து இவ்வாண்டுடன் 61ஆவது ஆண்டை பூர்த்தி செய்தன.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset