நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறாம் ஆண்டு, படிவம் மூன்றுக்கான தேர்வு கொள்கை வரைவு: அமைச்சரவை பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் 

கோலாலம்பூர்: 

ஆறாம் ஆண்டு, படிவம் மூன்றுக்கான தேர்வு கொள்கை வரைவு அமைச்சரவைப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார் 

இந்த இரு பொதுத்தேர்வுகள் யாவும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் இந்த கொள்கையை விவாதிக்கவுள்ளது. 

2025ஆம் ஆண்டு இறுதியில் நடப்பில் உள்ள கல்விக் கொள்கை முற்றுபெறவுள்ளது. இதனால் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக அவர் சொன்னார். 

எஸ்.பி.எம் பொதுத்தேர்வில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாண்டு எழுதவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட பொதுத்தேர்வுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று ஸாஹித் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset