நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொக்சோவுடனான மக்கள் சந்திப்பு சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்துகிறது: சிவக்குமார் வரவேற்பு

பத்து காஜா:

அரசாங்கம், அது சார்ந்த இலாக்காவை அதன் அலுவலங்களில் சென்று காண்பதைவிட சம்பந்தப்பட்ட இலாகா மக்களை சந்திக்க மக்கள் இருக்கும் இடத்திற்கே வருவது பெரும் பயனான ஒன்றாகவும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வையும் தெளிவையும் வழங்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் குறிப்பிட்டார்.

இதுபோன்று அரசு இலாகாவினர் மக்களை நேரடியாக வந்து சந்திப்பதை தாம் வரவேற்பதாகவும் கூறிய அவர் இம் மாதிரியான அணுகுமுறை மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் மட்டுமின்றி சிக்கல்களையும் தீர்க்க எளிதான ஒன்றாக அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

பத்து காஜா வட்டாரத்தில் நடைபெற்ற மக்களுடனான சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) சந்திப்பிற்கு பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், பத்து காஜாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அதில் கலந்து கொண்ட பொது மக்கள் பல்வேறு சேவைகளை பெற்றதோடு தங்களுக்கிடையில் இதுநாள் வரை இருந்து வந்த சொக்சோ சார்ந்த ஐயங்களுக்கும் சொக்சோ அதிகாரிகள், பொறுப்பாளர்களிடம் விளக்கம் பெற்றதாகவும் கூறினார்.

நடைபெற்ற சொக்சோவுடனான சந்திப்பில் சொக்சோவின் திட்டங்களில் பதிவு செய்வது, பயன்பெறுவது குறித்தும் விளக்கமும் பதிவு நடைபெற்ற வேளையில் இல்லத்தரசிகளுக்கான சொக்சோ பதிவு, சொந்த தொழில் செய்வோர்கான சோக்சோ பதிவுகள் போன்றவைகளுக்கான பதிவும் விளக்கமும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி,இன்றைய நிகழ்ச்சியில் MyFutureJobs திட்டத்தின் கீழ் வேலைக்கு விண்ணப்பம் செய்தலோடு முக்மின் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தின் (Pusat Dialisis Mukmin) இலவச மருத்துப் பரிசோதனையும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக் காண்பித்தார்.

அதேவேளையில், இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்த பொது மக்கள் அதனை வரவேற்றதோடு இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என வெளிப்படுத்திய உணர்வுகளையும் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந் நிகழ்ச்சியால் மக்கள் மனநிறைவு கொண்டதாகவும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக சமூகநலன் பெரிதும் காக்கப்படுவதாகவும் மக்களின் தேவைகள் எளிதாக அவர்களை சென்றடைவது பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுபோல், இலவச மருத்துவ பரிசோதனை குறிப்பாக சிறுநீரகம் சார்ந்த பரிசோதனை காலம் அறிந்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே தாம் கருதுவதாக கூறினார்.

தொடர்ந்து விவரித்த அவர் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் இதுமாதிரியான நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் சொக்சோ, முக்மின் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் உட்பட அனைத்து தரப்பிற்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சிவக்குமார் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset