நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்

சசுங்கைபூலோ:

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சுங்கைபூலோ ஆரோக்கிய முகாம், மடானி கிராம தத்தெடுப்பு திட்டம் பாயா ஜெராஸில் நடைபெற்றது.

கிராமப்புறங்களில் வசதிகள், அடிப்படை நடவடிக்கைகள் நிறைவடைந்ததை உறுதி செய்வதோடு வறுமையை ஒழிக்க வேண்டும் என்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்காகும்.

இதன் அடிப்படையில்தான் மடானி கிராம தத்தெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

பிரதமரின் இத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு சுங்கைபூலோவில் இத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீட்டின் மூலம் மக்கள் நலத் திட்டங்களுக்கு3.9 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளேன்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அவர்களின் நல்வாழ்வுக்கான சிறந்த அடிப்படை வசதிகளைப் பெறுவதை நான் எப்போதும் கண்காணித்து உறுதி செய்கிறேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset