நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிழி உணவுகள், சீனி பானங்களின் தீமையை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  

ஜோகூர் பாரு:

நாட்டில் மிகுந்து வருகின்ற எண்ணற்ற நோய்களிலிருந்து விடுபடவும், மாசுபாடில்லாத இயற்கையை நேசிப்பதற்கு பயனீட்டாளர் கல்வியே மிகச் சிறந்த பாடம் என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இது வெற்றி பெறுவதற்கு ஆசிரியர்களே முக்கிய பங்காற்ற முடியும் என்கிறார் அச் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

வெறும் பாட புத்தகத்தில் உள்ள தகவலை மட்டும் மாணவர்களுக்கு எடுத்துரைக்காமல், மனித இனத்தை மெல்ல மெல்ல கொன்று வரும் நெகிழி உணவுகள், இரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுகள், சுவை ஊட்டிகள் சேர்க்கப்பட்ட திடீர் உணவுகள், அதிக சீனியும் உப்பும் சேர்க்கப்பட்ட பானங்கள், குழந்தை உணவுகள் என்ற பெயரில் உயிரை மெல்லக் கொல்லும் நூற்றுக்கணக்கான உணவுகள்  சந்தையில் பெருகி வருகின்றன.

இவற்றிலிருந்து வளரும் குழந்தைகளை காப்பாற்ற பயனீட்டாளர் கல்வி மிகச் சிறந்த முறையில் பங்காற்ற முடியும் என்றார் சுப்பாராவ்.

பயனீட்டாளர் கல்வி என்பது பொருள் வங்குவது அல்ல.

ஆரோக்கியமான உணவை எவ்வாறு தேர்வு செய்வது, சத்தான உணவை தயார் செய்வது, உடலுக்கு தீமை தரும் இரசாயனங்களை கண்டு பிடித்து, அவற்றிலிருந்து விடுபட எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை சொல்லித்தருவதுதான் பயனீட்டாளர் கல்வி என்றார் சுப்பாராவ்.

இதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் ஆசிரியர்களே என்றார் அவர்.

ஜோகூர் பாருவிலுள்ள ஸ்ரீ தெமேங்கொங் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், அண்மையில் தமிழ் பயிற்சி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட பயனீட்டாளர் கல்வி விழிப்புணர்வு பட்டறையில் சிறப்புரை ஆற்றியபோது சுப்பாராவ் இதனை தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு வேண்டிய அனைத்து தகவல்களை தந்துதவ பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தயாராக இருப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

புகையின் ஆபத்து, உணவு விரயம், பயனீட்டாளர் கலாச்சார மோகத்திலிருந்து எப்படி ஏமாற்றப்படாமலிப்பது, மரம் நடுதல், இயற்கை விவசாய தோட்டம் போன்ற திட்டங்களும் இந்த பயனீட்டாளர் கல்வியில் அடங்கும் என்றார் சுப்பாராவ்.

ஒவ்வொரு ஆசிரியரும், சமுதாய முன்னேற்றத்திற்காக அவர்தம் பொறுப்பையும், மாணவர்கள் நல்ல பாதையில் செல்ல, அந்த ஆரம்ப மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கும், நலமான எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

இதனிடையே இந்த பயனீட்டாளர் கல்வி கருத்தரங்கை தெமேங்கோங் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தமிழ் மொழித் துறைத் தலைவர் திருமதி ஜமுனா அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset