நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் சமயக் கல்வியை அமல்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

ஷாஆலம்:

தமிழ், இடைநிலைப் பள்ளிகளில் சமயக் கல்வியை அமல்படுத்தும் முயற்சிகளுக்கு யாரும் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 100 மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த வகுப்புகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என்பது தான் மலேசிய இந்து சங்கத்தின் போராட்டமாக உள்ளது.

இதற்கான பாடப் புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இம் முயற்சிக்கு வெற்றி கிடைக்காமலே உள்ளது.

குறிப்பாக இத்தகு முயற்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பவர்களும் நம்மவர்கள் தான் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

இருந்தாலும் இம்முயற்சியை மலேசிய இந்து தர்ம மாமன்றம் என்றைக்கும் கைவிடாது என்று அவர் கூறினார்.

இதனிடையே இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பலர் ஒத்துழைப்பை தந்துள்ளனர்.

இந்த ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset