நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன் 97, டீசல் விலைகள் 6 சென் குறைந்தது

புத்ராஜெயா:

நாடு முழுவதும் ரோன் 97 பெட்ரோல், டீசலின் விலைகள் 6 சென்னுக்கு குறைக்கப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.
 
ரோன் 97 பெட்ரோல் விலை 3.25 ரிங்கிட்டில் இருந்து 6 சென் குறைந்து 3.19 ரிங்கிட்டுக்கு விற்கப்படும்.

கடந்த வாரம் ரோன் 97 பெட்ரோலின் விலை 15 சென் குறைக்கப்பட்டது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 3.01 ரிங்கிட்டில் இருந்து 6 சென் குறைக்கப்பட்டு 2.95 சென்னுக்கு குறைக்கப்படும்.

ரோன் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டது.

அதே சமயம் கிழக்கு மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டுக்கு விற்கப்படும்.

இந்த புதிய விலைகள் செப்டம்பர் 25 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset