நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி விசாரணையில் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது: நஜீப் வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

1 எம்டிபி விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு நியாயமான விசாரணைக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் வான் அஸ்மான் அய்மான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1 எம்டிபிக்கு சொந்தமான 2.3 பில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பில் நஜீப்பிற்கு எதிராக எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டது.

முன்னாள் நிதியமைச்சருமான நஜீப்பிற்கு நியாயமான விசாரணைக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

அரசுத் தரப்பு வழக்கின் முடிவில் வாதத்தை முன்வைத்த வான் அஸ்வான்,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அவசரத்திலும் குழப்பத்திலும் ஒரு சார்புடையதாக இருந்ததே இதற்குக் காரணம்.

எம்ஏசிசி விசாரணை அதிகாரி நூர் ஐடா அரிஃபின், 49ஆவது அரசுத் தரப்பு சாட்சியாகவும் உள்ளார்.

அவசர விசாரணையின் காரணமாக, நஜீப்பிற்கு மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 5ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி நியாயமான விசாரணையைப் பெறவில்லை என்று அவர்  வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset