நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.81 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 முதலை குட்டிகள், 14 இந்திய நட்சத்திர ஆமைகள் கடத்திய ஆடவர் கைது

கோலாலம்பூர்:

முப்பது முதலை குட்டிகள், 14 இந்திய நட்சத்திர ஆமைகள் கடத்திய அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றின் மொத்த மதிப்பு 1.81 மில்லியன் ரிங்கிட்  என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் முஹம்மத் யூசப் மாமாட் இதனை கூறினார்.

தெற்காசியாவில் உள்ள ஒரு நாட்டில் இருந்து இந்த அரிய வகை வன விலங்குகளை அவர் கடத்தி வந்துள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே காணப்படுகிறது.

கடத்த முயன்ற விலங்கு இனங்களுக்கு கறுப்புச் சந்தையில் அதிக மதிப்பு  உள்ளது.

ஒரு முதலை குட்டியின் விலை 60,000 ரிங்கிட்டாகும். அதே போன்று அரிய வகை இந்திய நட்சத்திர ஆமையின் விலை 1,350 ரிங்கிட் ஆகும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset