நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கருத்திணக்க உடன்படிக்கையை நிராகரித்த எதிர்கட்சியினர்: கலந்துரையாடல் நிறைவடைந்துவிட்டதாக பொருள் கொள்ளக்கூடாது: ஃபாஹ்மி ஃபட்சில் 

கோலாலம்பூர்: 

எதிர்கட்சி தரப்புக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அரசாங்கத்தின் கருத்திணக்க உடன்படிக்கையானது எதிர்கட்சியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல் நிறைவடைந்துவிட்டதாக பொருள் கொள்ளக்கூடாது என்று அரசாங்க பேச்சாளர் ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

எதிர்கட்சி தரப்புடன் இணைந்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த எந்நேரமும் தயாராக உள்ளது.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மடானி அரசாங்கம் எல்லா தரப்பினருக்கும் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கட்சியினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றால் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளைச் செவிசாய்க்க தயாராக உள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் சொன்னார். 

முன்னதாக, பெஸ்தா செனி 2024 நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset