நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங்கில் சமயங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட 6 கும்பல்கள் செயல்படுகின்றன: பகாங் சுல்தான்

குவாந்தான்:

பகாங் மாநிலத்தில் சமயங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட 6 கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனர்.

பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா இதனை கூறினார்.

இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு 34 மதங்களுக்கு எதிரான போதனைகள் வழங்கும் கும்பல்கள் இருந்தன.

இருப்பினும் பல காரணங்களால் காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து  விட்டது.

இந்த நிலையில் இன்னும் செயல்பட்டு வரும் ஆறு கும்பல் இரண்டு எனது கிராமமான பெக்கனில் உள்ளது.

இது எனக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த கும்பல்கள் தொடர்ந்து தேவையற்ற விஷயங்களை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

குவாந்தானில் நடைபெற்ற பகாங் மாநில ரீதியிலான மௌலிதுர் ரசூல் விழாவில் உரையாற்றிய சுல்தான் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset