நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் சான்றிதழ் தொடர்பான ஆய்வறிக்கை புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும்

புத்ராஜெயா:

ஹலால் சான்றிதழ் தொடர்பான ஆய்வறிக்கை வரும் புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படும்.

பிரதம மந்திரி துறையின் மத விவகார அமைச்சர் டத்தோ டாக்டர் முகமத் நயீம் மொக்தார் கூறினார்.

ஹலால் சான்றிதழ் தொடர்பான முடிக்கப்பட்ட வரைவு ஆய்வு, அறிக்கை தேசிய இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான வாரியக் கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அமைச்சரவை இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஜாக்கிம் ஹலால் சான்றிதழ் தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கும்.

ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவதற்கான முன்மொழிவை உள்ளடக்கும் வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் மத்தியில் கவலை  இருப்பதால், ஹலால் சான்றிதழ் கட்டாயமாவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சு பார்க்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset