நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக இளம் வேட்பாளர்: ஓன் ஹஃபிஸ் காஸி வரவேற்பு 

ஜொகூர் பாரு: 

மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக ஓர் இளைஞரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார். 

இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அவர்களுக்கு வழங்கக்கூடிய அங்கீகாரமாகும் என்று அவர் கூறிய வேளையில் இளைஞர் நலன்களில் வேட்பாளர் சையத் ஹுசைன் அக்கறை செலுத்தக்கூடியவர் என்று அவர் தெரிவித்தார் .

ஓர் இளைஞராக இருக்கும் தான் மற்றொரு வேட்பாளரை அங்கீகரிக்கிறேன் என்று தேசிய முன்னணி சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார் 

மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக சையத் ஹுசைன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய கூட்டணி வேட்பாளர் ஹைசான் போட்டியிடுகிறார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset