நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா ஸ்டாரில் பசிகால் லாஜாக் சம்பவம்: காவல்துறை விசாரணை 

கோத்தா ஸ்டார்: 

கோத்தா ஸ்டாரில் உள்ள இளைஞர்கள் சிலர் தங்களின் சைக்கிள்களை மாற்றியமைத்து பசிகால் லாஜாக் சாகசத்தில் ஈடுபட்டு சாலைகளில் விழுந்து காயத்தை ஏற்படுத்திக்கொண்டனர். இந்த அபாயகரமான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை 9.24 மணிக்கு இந்த சம்பவம் குறித்த காணொலி பதிவு கிடைத்துள்ளதாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை துறை தலைவர் சித்தி நோர் சலாவாத்தி உறுதிப்படுத்தினார். 

எட்டு இளைஞர்கள் இதில் சம்பந்தப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு கொண்டு இந்த பசிகால் லாஜாக் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு போலிஸ் புகாரும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் பசிகால் லாஜாக் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறை விசாரணை அதிகாரியையோ அல்லது கோத்தா ஸ்டார் போலிஸ் தலைமையகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுகொண்டார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset