நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்ற தர்ஷினியின் கனவை நனவாக்கிய ஸ்டீவன் சிம்

புக்கிட் மெர்தாஜாம்:

மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்ற தர்ஷினியின் கனவை மனிதவள அமைச்சர்  ஸ்டீவன் சிம் நனவாக்கியுள்ளார்.

பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும், பார்வையற்ற தன் தாயைக் கவனித்துக் கொள்ள விரும்பி அதை நிராகரித்த  தர்ஷினியின் கதை ஸ்டீவன் சிம் கவனத்திற்கு வந்தது.

21 வயதான தர்ஷினி சுப்ரமணியம், மலாக்காவில் உள்ள மலேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் குடும்ப சூழ்நிலையால் மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவையும் வாய்ப்பையும் தர்ஷினி நிராகரித்துள்ளார்.

தர்ஷினியின் தந்தை இப்போது இல்லை. அவரது தாய் பார்வையற்றவர்.

சில ஆண்டுகளுக்கு முன் படிக்கட்டில் இருந்த கீழே விழுந்து அவருக்கு கால் உடைந்தது.

தாயை கவனிக்க வேண்டும் என்பதால் அவர் ஒரு மினி மார்க்கெட்டில் 1,500 ரிங்கிட்டுக்கு வேலை செய்தார்.

இந்நிலையில் அம் மாணவியையும் அவரின் தாயாரையும் அமைச்சர் ஸ்டீவன் சிம் சந்தித்தார்.

பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான செலவு, பதிவுக் கட்டணம், லேப்டாப் உட்பட அனைத்து செலவுகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

ஒருவேளை தர்ஷினிக்கு பிடிபிடிஎன் கடனுதவி கிடைத்தால் தாம் கொடுக்கும் நிதியை தர்ஷினியின் தாயின் தேவைகள் உட்பட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படலாம் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset