நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை துணைப் பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்தார்

கோலாலம்பூர்:

மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான  டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி திறந்து வைத்து சிறப்பித்தார்.

மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாடு ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இம் மாநாட்டிற்கு துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையேற்றார்.

மாநாட்டிற்கு முன்னதாக மஇகா கட்டவிருக்கும் புதிய தலைமையகத்தின் மாதிரிக் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

மஇகா தலைமையகம், எம்ஐஇடி தலைமையகம், ஹோட்டல், அடுக்குமாடி குடியிருப்பு என மூன்று கட்டிடங்களாக இப் புதிய தலைமையகம் அழகாக கட்டப்பட உள்ளது.

மஇகா வரலாற்றில் இப் புதிய தலைமையகம் புதிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset