நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

வெறுப்பை விதைக்க மதத்தை பயன்படுத்தும் சில குழுக்களால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட இந்த குழுக்கள் இஸ்லாத்தை வெறுப்புடன் ஊக்குவிப்பதன் மூலம் நம்பிக்கையின் புனிதத்தை கெடுத்துவிட்டது.

குறிப்பாக அவர்களுடன் இணைந்தவர்களை மட்டுமே நல்லவர்களாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.

மற்ற அனைவரும் நல்லவர்கள் அல்ல. அரசாங்கம் கெட்டது. அவர்களின் சொந்த இனமும் குழுவும் மட்டுமே நல்லவை என்று அவர்கள் கூறித் திரிகின்றனர்.

இத்தகைய சிந்தனையும் செயல்பாடும் சமூகத்தை அழித்துவிடும்.

ஒருபுறம் இஸ்லாமோஃபோபியா, மறுபுறம், தங்களை ஒரே உண்மையான இஸ்லாமியக் குழுவாகக் கருதுபவர்கள்.

எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

கூட்டரசு பிரதேச பள்ளிவாசலில் 24,000 பேர் கலந்து கொண்ட ஹஃப்பாஸ் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset