நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் அல்லாதவர்கள் இனி பாஸ் கட்சியில் உறுப்பினர்களாகலாம்

தெமர்லோ:

பாஸ் கட்சியின் சட்டத்தை திருத்துவதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முஸ்லிம் அல்லாதவர்கள் இப்போது அக் கட்சியில் உறுப்பினர்களாகலாம்.

கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தகியூடின் ஹசான் முன்வைத்த தீர்மானம் பேராளர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அதே வேளையில் எந்த மதமும் இல்லாத ஒருவர் பாஸ் கட்சியில் இணைய தகுதியற்றவர் என முடிவு செய்யப்பட்டது.

பாஸ் கட்சியின் உறுப்பினராக இருக்க விரும்பும் ஒருவர் மதம் சார்ந்தவராக இருக்க வேண்டும். 

அது இந்துவாகட்டும், கிறிஸ்தவராகட்டும், பௌத்தராகட்டும், சீக்கியராகட்டும் இந்த உலகில் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் அவர் இருக்கலாம்.

 பாஸ் கட்சியின் 70ஆவது  ஆண்டுக் கூட்டத்தில் பேராளர்களுக்கு அவர் அளித்த விளக்கத்தில் கூறினார்.

இம்முறை கூட்டத்தில் 1,325 பேராளர்கள் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை  அங்கீகரித்தனர்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு குறைந்தபட்சம் 883 உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset