நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க பாடுபடுவோம்: டத்தோ ஆரோன் அகோ

கோத்தா கினபாலு:

பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தினார். 

சில சமூக வேறுபாடுகளால் பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றார் அவர். 

இன்று இங்கு மடானி நல்லிணக்க நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

சில சமூக வேறுபாடுகளால் மக்களிடையிலான ஒற்றுமையின் நிலை மறைமுகமாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 14 ஆகஸ்டு 2020-ல் சமய பக்தர்களுக்கு இடையே நல்லிணக்க செயற்குழு ஒன்றை அமைச்சரவை அமைத்தது. 

இஸ்லாமிய சமயம், முஸ்லிம் அல்லாதவர் சமய அமைப்புகளுக்கிடையே இருந்து வரும் இடைவெளிகளை இணைக்கச் செய்ய இந்த செயற்குழுவை அரசாங்கம் அமைத்தது. 

இந்த செயற்குழுவின் மூலம் இத்தகு அமைப்புக்கள் மக்களின் நிலைத்தன்மைக்காக கருத்து பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம் 
என்றார் அவர்.

மேலும் மக்களின் நலங்களுக்காக சமய பக்தர்களுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்திற்கு தாமும் பிரதமர் இலாகா (சமய விவகார) அமைச்சரும் இணைந்து தலைமையேற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த கூட்டங்களில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா, மலேசிய இஸ்லாமிய புரிந்துணர்வுக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 10 இஸ்லாமிய அறிஞர்கள், 15 இஸ்லாமிய அல்லாத அறிஞர்கள் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.

சமயங்களைப் பின்பற்றுவோரிடையே நல்லிணக்கத்தை மேலும் வலிமைப்படுத்துவது இந்த செயற்குழுவின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டார். 

கோத்தா கினபாலு, லீ மெரிடியன் விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset