நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு அக். 6ஆம் தேதி நடைபெறும்

பெட்டாலிங் ஜெயா:

மாணவர்களை அரசாங்கத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஒருங்கிணைக்கப்பட்ட  தேர்வை நடத்தவிருக்கிறது.

6ஆம் ஆண்டு, மூன்றாம் படிவ  மாணவர்களை இலக்காகக் கொண்ட இத் தேர்வு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நாடு  முழுமையும் உள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களிலும் இயங்கலை வாயிலாகவும் நடத்தப்படும் என்று ஈப்போ ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயணன் தெரிவித்தார். 

ஆறாம் ஆண்டு மாணவர்களை இடைநிலைப் பள்ளி தேர்வுக்குத் தயார்படுத்தும் அதே நேரத்தில் மூன்றாம் படிவ  மாணவர்களை ஐந்தாம் படிவத்திற்குத் தயார்படுத்துவதே இத் தேர்வின் முக்கிய நோக்கம் என்றார். 

இதில், தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, தமிழ் மொழி ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும். 

இந்த வாய்ப்பை ஸ்ரீ முருகன்  நிலைய மாணவர்கள் மட்டுமல்லாது  அனைத்து இந்திய மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இங்குள்ள இந்நிலையத்தின் தலைமையகத்தில் மாணவர்களின் தேர்வு குறித்து கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

மாணவர்களின்  தற்போதைய அடைவு நிலையைத் தெரிந்து கொள்ளவும் அதனை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இத்தேர்வு துணை புரியும் என்றார் இந்நிலையத்தின் வட பகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுமதி. 

இதில், தமிழ்ப்பள்ளி, மலாய்ப் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

இத்தேர்வின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கும் தாங்கள் விளக்கமளிக்கவிருப்பதாக அவர் மேலும் கூறினார். 

இந்தத் தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இத் தகவலை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது மேலும் அதிகமான மாணவர்களை இத்தேர்வை எழுத ஊக்குவிக்கும் என ஸ்ரீ முருகன் நிலையத்திம் அசோக் வேலு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset