நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காப்புறுதி முகவர்களின் பணி உன்னதமான சேவை: செனட்டர் சரஸ்வதி

கிள்ளான்:

காப்புறுதி முகவர்களின் பணி ஓர் உன்னதமான சேவை என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

இவர்கள் வழங்கி வரும் சேவை தனி நபர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை வழங்கி வருவதாக அவர் சொன்னார். 

நேற்று கிள்ளானில் ஸூரிக் காப்புறுதி முகவர்கள் ஏற்பாடு செய்த 'உயர்ந்திடு மனிதா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசினார்.

நம் நாட்டில் 14 காப்புறுதி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த காப்புறுதி நிறுவனங்களில் அதிகமான இந்தியர்கள் முகவர்களாக இருந்து வருகின்றனர். 

ஆனால் இவர்களில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனரா என்பது கேள்விக் குறிதான். மக்களை அணுகி காப்புறுதி பாலிஸிகளை விற்பது எளிதான காரியம் அல்ல.

ஆனால் நமது இந்திய சமுதாயத்தில் 30 விழுக்காட்டினர் மட்டுமே காப்புறுதி பாலிஸிகளை வைத்துள்ளனர்.

ஆகையால் குறிப்பாக துடிப்பான இந்திய காப்புறுதி முகவர்களுக்கு இந்த துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் சொன்னார்.

காப்புறுதி முகவர்களின் பணி அரசியல்வாதிகளின் சேவைகளைவிட மிகச் சிறந்தது என்றுதான் கூற வேண்டும். 

காரணம் ஆயுள் காப்புறுதி பாலிஸிகளை விற்று மக்களுக்கு நீங்கள் பாதுகாப்பை வழங்கி வருகின்றீர்கள் என்றார் அவர்.

இது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓர் உன்னதமான சேவை என்றால் அது மிகையாகாது.

அதே போல் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சராக நியமனம் செய்ததாக அவர் சுட்டிக் காட்டினார். 

அந்த வகையில்  நாட்டில் பல இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்த தம்மால் இயன்ற பணிகளை செய்து வருவதாக செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset