நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யாகி புயல் காரணமாக வியட்நாமின் Ha Long, Sa Pa பகுதிகளுக்கான பயணத்தை பொதுமக்கள் ஒத்திவைக்க வேண்டும்: மலேசியத் தூதரகம் 

கோலாலம்பூர்: 

வடக்கு வியட்நாமில் ஏற்பட்டுள்ள யாகி புயலால்  Ha Long, Sa Pa பகுதிகளுக்கான 
பயணத்தை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வியட்நாமின் ஹனோய் நகரிலுள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

ஹா லாங் மற்றும் சா பா ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் பயணத் திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தற்போது வியட்நாமில் யாகி புயல் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு வசிக்கும்  அல்லது வேலை செய்யும் மலேசியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையின்றி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மலேசியர்கள் ஏதேனும் அவசர தூதரக உதவி தேவைப்பட்டால் அவர்கள் உடனடியாத் தூதரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாகி புயலால் ஏற்பட்ட கனமழையால் Lao Cai, Yen Bai, Thai Nguyen, Cao Bang ஆகியப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset