செய்திகள் உலகம்
ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளது
தோக்கியோ:
ஜப்பான் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்கத் திட்டமிடுகிறது .
2030-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஷின்கான்சென் (Shinkansen) அதிவேக ரயில்கள் இயங்கும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே (East Japan Railway) நிறுவனம் தெரிவித்தது.
2028-ஆண்டு தானியக்க ரயில்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று (East Japan Railway நிறுவனம் கூறியது.
ஆயினும் ஓட்டுநர்கள் ரயில்களில் இருப்பார்கள்.
2029-ஆம் ஆண்டில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்கள் பயணிகள் பயன்படுத்தாத ரயில் பாதையில் சோதிக்கப்படும்.
அந்த முயற்சி சுமுகமாக இருந்தால் 2030-ஆம் ஆண்டுகளில் அவை பயணிகள்-ரயில் செல்லும் பாதையில் இயங்கத் தொடங்கும்.
இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் ஊழியர்கள் பணிபுரியும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம் தெரிவித்தது.
ரயில்வே தொழில்நுட்பத்தைப் புதுப்பிப்பதன் மூலம் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும் நிறுவனம் முனைகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:07 pm
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சிற்பி டாக்டர் முஹம்மது உமர் சாப்ரா 93 வயதில் காலமானார்
June 13, 2026, 4:04 pm
4 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்
June 11, 2026, 12:06 pm
17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது
June 11, 2026, 10:20 am
