நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்: ஈப்போவில் பெற்றோரியல் பயிற்சி

ஈப்போ: 

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் "பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்" என்ற திட்டத்தை கடந்த 2009 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்பொழுது இத் திட்டத்தின் வாயிலாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்கள் நன்மை அடைந்தனர் என்று இம்பாக் திட்ட இயக்குநர் ஏ.கே.கிருஷ்ணா கூறினார்.

10 வாரமாக பெற்றோரியல் பயிற்சி முறை மூலம், பெற்றோர்களுக்கு குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதனை இப்பயிற்சியின் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இந்த இம்பாக் திட்டத்தை முன்னெடுப்பதில் தமிழ் அறவாரியம் தீவிரமான முயற்சியை முன்வைக்கும் என்று இங்குள்ள மெங்களம்பு, பேராக் சங்கீத சபா, குனோங் ராபாட் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது அவர் குறிப்பிட்டார்.

ஒரு குழந்தையின் வெற்றி என்பது அதை சுற்றி இருக்கின்ற சுற்று சூழலையும், அந்தக் குழந்தையிடம் தொடர்புடையவர்களையும் பொறுத்து அமைகின்றது. எனவே, அதிகமான நேரம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இவர்களுடன் தொடர்பு இருக்கிறது. ஆசிரியர்களுடைய பணி கல்வி கற்பிப்பது. பிறகு அம்மாணவனை ஒரு நல்லொழுக்கமிக்க மாணவனாக மாற்றுவது. ஆகவே, பெற்றோர்களும் ஆசிரியரின் பணிகளில் பல பணிகளை எடுத்து செய்யலாம் என்று இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்ட மலாயா பல்கலைக்கழக முனைவரும் இம்பாக் செயல்திட்ட ஆலோசகருமான முனைவர் சி.ம. இளந்தமிழ் அறிவுறுத்தினார்.

இருவருமே இணைந்து அந்த மாணவரின் வெற்றியை உறுதி செய்வதற்கான சிந்தனைதான் இந்த பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதிசெய்யலாம் என்ற திட்டம். இந்த திட்டத்தை முன்னெடுப்பது சமூகத்தை வலப்படுத்துகின்ற அதே வேளையில் அடுத்த தலைமுறை இந்த நாட்டிலே தன்மானமிக்க ஒரு குடிமகனாக வாழ்வதற்கு வித்திடும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

இம்பாக் திட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதும் பாடத்திட்டம் மிகவும் மனம் நெகிழ செய்கிறது என்று பாராட்டினார் இந்நிகழ்வின் தலைமை சிறப்பு பிரமுகரான முனைவர் சேகர் நாராயணன்.

நிறைவுவிழாவில் 62 பெற்றோர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் முனைவர் சேகர் நாராயணன். அத்துடன் இந்நிகழ்வில் பணிஓய்வு பெற்ற முனைவர் சேகர் நாராயணன் சிறப்பிக்கப்பட்டார்.

இந்நிகழ்வை இம்பாக் பயிற்றுனர் ஷாமின சிறப்பாக ஏற்பாடு செய்தார். 

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset