நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றைக் குடிநுழைவுச் செயலிக்குச் சிங்கப்பூர் மலேசியப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது

ஜொகூர் பாரு:

ஜொகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரு நிலவழி சோதனைச்சாவடிகளை அடிக்கடி பயன்படுத்தும் மலேசியப் பயணிகள், ஒற்றைக் குடிநுழைவுச் செயலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மூன்று மாத முன்னோட்டத் திட்டமாக இதுவரை மூன்று குடிநுழைவுச் செயலிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தினால் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு எளிதாகவும் சௌகரியமாகவும் இருக்கும்.

ஜூன் மாதத்திலிருந்து இந்த மூன்று செயலிகளையும் 320,000 மலேசியப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, சுல்தான் அபு பாக்கர் சுங்கக், குடிநுழைவு சோதனைச்சாவடி-துவாஸ் சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் மலேசியப் பயணிகள் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி-உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் மலேசியப் பயணிகள் மைரென்டாஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மைபோர்டர்பாஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

முக அடையாளம் அல்லது கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்த இந்தச் செயலி அனுமதிக்கிறது

இம்மூன்று செயலிகளில் பெரும்பாலானோர் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட 190,000 பேர் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைபோர்டர்பாஸ், மைரென்டாஸ் ஆகிய செயலிகளைத் தலா 65,000 பேர் பயன்படுத்துகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset