நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரசாயன துர்நாற்றம்: அருகிலுள்ள பள்ளிகளின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது

ஜொகூர் பாரு: 

ஜொகூர் பாரு நகரில் ரசாயன கழிவு ஆற்றில் கொட்டப்பட்ட நிலையில் அதிலிருந்து வெளியாகியிருக்கும் துர்நாற்றம் குறித்து அருகிலுள்ள பள்ளிகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார் 

பாதுகாப்பு நலன் கருதி பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மலேசிய சுகாதார அமைச்சின் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் அமைச்சு பெறும் என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், சுற்றுச்சூழல் தூய்மை கேடு தொடர்பான விவகாரங்களை கையாள மலேசிய கல்வி அமைச்சின் செயல்பாட்டு தர விதிமுறைகளைப் பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். 

ஆற்றங்கரையின் அருகில் உள்ள பள்ளிகளின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த ரசாயன துர்நாற்றம் காரணமாக எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிந்தது அவ்வாட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

- தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset